வந்தாரை வாழ வைத்தோம் , தமிழ் சொந்தங்களை வீழ வைத்தோம்
"நாங்கள் தனி நாடு கேட்கவில்லை. சிங்களரோடு சமமாகவே வாழ விரும்புகிறோம். இந்திய மாநிலங்களுக்கு இருக்கும் உரிமைகள் அனைத்தும், ஈழத் தமிழ் நிலத்துக்கு தரப்படவேண்டும்" என ஈழத் தமிழர்கள் இறங்கிப்போகவேண்டும் என்கிறார் தமிழருவி மணியன்.
"சிங்களர்களின் கோபத்திற்கு ஆளாகாமல், இலங்கையின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, தமிழர்கள் அதிகாரப் பகிர்வு பெறவேண்டும்" என்கிறார் கருணாநிதி. "தமிழ் மக்கள் அமைதியாக வாழும் வகையில் அதிகாரம் பரவலாக்கப்பட வேண்டும்" என வலியுறுத்துகிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா.
"தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டம், முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் மீள்குடியேற்றம் ஆகியவை குறித்து இலங்கை அரசுக்கு தான் அழுத்தம் கொடுத்து வருவதாக" கூறுகிறார் பாண் கீ மூன்.
"தமிழர்கள் இனி தாயக விடுதலையைக் கைவிட்டு, இலங்கை அரசுக்கு கட்டுப்பட்ட ஒரு மாநிலத்தில் வாழவேண்டும்" என்று உலக அளவில் தமிழர்களுக்கு எதிராக ஒரு பரப்புரை நிகழத் தொடங்கி இருப்பதையே இவர்களின் கூற்றுகள் தெளிவாக்குகின்றன.
அவர்கள் அறிவுரையை நாம் ஏற்றுக்கொண்டால் என்ன நடக்கும்? தமிழர்களுக்கென ஒரு சிறு பகுதியை ஒதுக்கி மாநிலம் என்பார்கள். கைக்கூலி கருனாவைப்போல் ஒரு பொம்மையை முதலமைச்சர் என்பார்கள். அந்த சிறு பகுதியிலும் சிங்களவன் குடியேற்றம் நடக்கும். பள்ளிகளில் சிங்கள ஆசிரியனை நியமித்து தமிழ் மொழியை அழிப்பார்கள். காவல்துறையும் அவர்கள் வசமே இருக்கும். மக்கள் இப்போது முகாம்களில் உள்ள நிலைக்கும் அப்போதைய நிலைக்கும் எந்த வேறுபாடும் இருக்கப்போவதில்லை.
ஆனால் அதையும்கூட இப்போது தரத் தயாரில்லை சிங்களன். சமீபத்தில் ஒரு இணைய தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் இதைத் தெளிவாகக் கூறியுள்ளான் ராஜபக்சே. நாடாளுமன்றத்தில் தனக்கு சிறிய பெரும்பான்மையே உள்ளதாகவும், அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக கருத்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டியிருப்பதால், அதிகாரப் பகிர்வு தற்போது சாத்தியமல்ல எனவும் தெரிவித்துள்ளான். இதிலிருந்தே சிங்களன் எப்போதும் தனக்கு சமமாகத் தமிழனை நடத்த முன்வரமாட்டன் என்பதை புரிந்துகொள்ளலாம்.
உலகின் அங்கீகாரம் கிடைக்கப் பெறாமலே, ஒரு அரசை நிறுவி, இராணுவம், நிதி, நீதி, மருத்துவம், காவல்துறை, வங்கித்துறை, கல்வித்துறை, முதியோர் காப்பகம், குழந்தைகள் காப்பகம் என ஒரு அரசுக்கு இருக்கவேண்டிய துறைகள் அனைத்தையும் உருவாக்கி வெற்றிகரமாக நடத்தி வரலாறு படைத்துவிட்டோம். நாம் படைத்த இந்த வரலாற்றை சிதைத்து, நம்மை பண்டைய அடிமை நிலைக்கு எடுத்துசெல்ல நாம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது. எந்த ஒரு விடுதலைப் போராட்ட இயக்கத்தவரையும் வெற்றி பெறும்வரை தீவிரவாதி என்றுதான் உலகம் சொல்லும். ஆனால் விடுதலையை வென்றெடுத்துவிட்டால் அவர்களை புரட்சியாளர்கள் என்பார்கள். நாம் தமிழீழத்தை வென்றெடுப்பதன் மூலமே தாயக விடுதலைக்கு உயிர் தியாகம் செய்த நம் சொந்தக்களுக்கு புரட்சியாளர்கள் என்கிற கவுரவத்தை பெற்றுத் தரமுடியும்.
'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். எனவே இப்போதுள்ள சூழ்நிலையில் நாம் நமது போராட்ட வடிவத்தை மாற்றிக் கொண்டு அறவழியில் போராடுவோம். தமிழீழம் பெறுவது தமிழர்களின் உரிமை. அதற்காக போராடுவது ஒவ்வொரு தமிழனின் கடமை. "வந்தாரை வாழ வைத்தோம் , தமிழ் சொந்தங்களை வீழ வைத்தோம்" என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிட்டோம். இனியாவது சாதி, மதம், அரசியல் வேறுபாடுகளை மறந்துவிட்டு ஒற்றுமையுடன் போராடுவோம். "புலிகளின் தாகம், தமிழீழ தாயகம்" என்று போராடியபோது புலிகளைக் காரணம்காட்டி சிலர் நமக்கு ஆதரவு தரமறுத்தனர். இப்போது "தமிழரின் தாகம், தமிழீழ தாயகம்" என்கிறோம். தாய்த் தமிழ் உறவுகளே, இப்போதாவது ஒன்றுபட்டு நம் இன விடுதலைக்கு குரல் கொடுங்கள்..

4 comments:
வணக்கம் எம் தமிழ் உறவுகளே நாங்கள் ஆரம்பித்துள்ள www.tamilseithekal.blogspot.com பிளாகுக்கு உங்கள் அனைவரது ஆதரவு தேவை உங்கள் இணையதளத்திலோ அல்லது பிளாகிலோ எங்களுடைய பிளாகையும் இணைக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்..
அன்புடன்
தமிழ்செய்திகள் team
அன்பார்ந்த என் தாய் தமிழ் உறவுகளே ;மே பதினெட்டுக்கு முன்பு ஈழ உறவுகளை விடுதலை புலிகள் காப்பாற்றினர் . தற்போது தமிழ் ஈழத்தையும் ஈழ மக்களையும் காப்பற்ற முன்பை விட பல மடங்கு நாம் போராட வேண்டும் .அதை விட தமிழ் துரோகிகளை மக்கள் முன்பு அம்பலப்படுத்தி முழு வீச்சுடன் போராட்டத்தை முன்னெடுக்கும் பணி நம் இன தலைவர்களிடம் உள்ளது . தினம் ஒரு போராட்டம் தினம் ஒரு பேரணி குறைந்தது ஒரு லட்சம் மக்களாவது போரட்டத்தில் ஈடுபட வேண்டும் அப்போதுதான் தமிழ் ஈழம் கனவுகள் நனவாகும் .இதை செய்தால் ஈழத்தில் சிங்களனை என் அண்ணன் பிரபாகரன் பார்த்து கொள்வர் இன்றே அப பணியை இன்றே தொடர்வோம் by ponnusamy d.reddiyapatty chinnampatty p.o tharagampatty via karur d.t tamilnadu 621311 ph 9715791000
sir,heartly welcome to your tamilseithigal
i am a member of naam tamilar iyakkam.so very useful newsfor all our thamilan
Post a Comment