தமிழன்

Tuesday, July 28, 2009

தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள்.

திருப்பூரில் உள்ளது நியூ மெரிடியன் அப்பரெல்ஸ் லிமிட்டெட் என்கிற உள்ளாடை தயாரிக்கும் தொழிற்சாலை. அங்கு சுமார் 1000 தொழிலாளர்கள் வேலைசெய்து வந்தனர். மூன்று மாதங்களுக்கு முன்பு சமிந்த பண்டார நாயகே என்ற சிங்களன் மேலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அன்று முதல் படிப்படியாக தமிழர்களை வேலையிலிருந்து நீக்கிவிட்டு ஒரிசாவிலிருந்து ஆட்களை பணியில் அமர்த்தியுள்ளான். மேலும் பதினைந்து சிங்களர்களை மேற்பார்வயாளர்களாகவும் நியமித்துள்ளான். அந்த சிங்களர்கள் அங்குள்ள பென்தொளிலாளர்களிடம் முறைகேடாக நடந்துள்ளனர். மேலும் மற்ற தொழிலாளர்களிடம் தொடர்ந்து தகராறு செய்துள்ளனர். இதை தட்ட்டிகேட்ட ரவி, செல்லபாண்டியன் ஆகிய தொழிலாளர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைக் கண்டித்து ஐ.என்.டி.யு.சி சங்கத் தோழர்கள் உண்ணவிரதப் போராட்டம் இருக்க, ஆலை நிர்வாகமோ ஆலையை மூடிவிட்டது. தமிழன் ஈழத்தில் அடிவாங்கியபோது கொதித்தெழாத தமிழர்களே.. இப்போதாவது கொதித்தெழுங்கள். தமிழன் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய சிங்களனையும், வடனாட்டுக்காரனையும் இங்கிருந்து விரட்டவாவது குரல்கொடுங்கள் என்று முழக்கமிட்டவாறு ஆர்ப்பாட்டம் செய்த 100-க்கும் மேலான பெரியார் திராவிடர் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவை அனைத்தும் நக்கீரன் இதழில் செய்தியாக வெளியாகி உள்ளது.

சிங்களவன் ஈழத்தமிழர்களைத்தானே அடிக்கிறான் என்று நாம் உணர்ச்சியற்று இருந்தோம். இப்போது தமிழ் நாட்டின் மத்திய மாவட்டமான திருப்பூருக்கே வந்து அடிக்கிறான். 1000 தமிழ் தொழிலாளர்கள் உள்ள இடத்தில் 15 சிங்களன் காலித்தனம் செய்கிறான் என்றால், தமிழன் என்றும் ஒன்றுபட்டு போராடமாட்டான் என்கிற துணிச்சல்தானே.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.மு.க , காங்கிரஸ் தவிர்த்த அனைத்து அரசியல் கட்சிகளும், அண்ணன் சீமான், அய்யா பழ.நெடுமாறன் போன்ற தமிழ் உணர்வாளர்களும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழர்கள் அனைவரும் ஒன்றுபடுமாறும், தமிழின துரோகிகளுக்கு எதிராக வாகளிக்குமாரும் கேட்டனர். ஆனால் நாம் 200-க்கும், 300-க்கும் நமது இனுஉணர்வை விற்றோம். அதற்கான பலனை மூன்றாம் நாளே அறுவடை செய்தோம். 200 ரூபாய்க்கு இனுஉணர்வை அடமானம் வைத்த மூன்றாம் நாளே 20,000 தமிழ் உறவுகளை சிங்கள காடயனுக்கு காவுகொடுத்தோம். காலம் கடந்தாவது விழித்துக் கொள்வோம் தோழர்களே. இனியாவது நம் இனம்காக்க, இனமானம் காக்க ஒன்றுபட்டு போராடுவோம்.

2 comments:

pons said...

தந்தை பெரியார் சொன்னது மாதிரி தமிழன் தோல் மாட்டுத் தோல் .எழுபத்தி அயிந்து ஆண்டுகள் சொல்லித்தான் கொஞ்சம் நாம் தமிழன் என்று உணர்ந்தான் இடையில் சினிமாக்காரன் வந்து நாம் தமிழன் என்பதை மறந்தான் .தற்போது டாஸ்மார்க்கில் தன் இனமானத்தை தொலைத்தான் அரசியல் வாதிககளை நம்பினால் நம் இனம் உன்னற்சியற்று போவான பெரியார் சொன்னதுபோல் தமிழனை அழிக்கும் அரசியல் கடவுள் மதம் சினிமா இவற்றை ஒதுக்கிநாள் தான் நாம் தமிழன் என்ற அடையாளம் கிடைக்கும்.

pons said...

தந்தை பெரியார் சொன்னது மாதிரி தமிழன் தோல் மாட்டுத் தோல் .எழுபத்தி அயிந்து ஆண்டுகள் சொல்லித்தான் கொஞ்சம் நாம் தமிழன் என்று உணர்ந்தான் இடையில் சினிமாக்காரன் வந்து நாம் தமிழன் என்பதை மறந்தான் .தற்போது டாஸ்மார்க்கில் தன் இனமானத்தை தொலைத்தான் அரசியல் வாதிககளை நம்பினால் நம் இனம் உன்னற்சியற்று போவான பெரியார் சொன்னதுபோல் தமிழனை அழிக்கும் அரசியல் கடவுள் மதம் சினிமா இவற்றை ஒதுக்கிநாள் தான் நாம் தமிழன் என்ற அடையாளம் கிடைக்கும். PONNUSAMY REDDIYAPATTY CHINNAMPATTYP.O KARUR D.T TAMILNADU 621311

Post a Comment

 
 
 
Tamil 10 top sites [kalakam.com]
Tamil Top Blogs